Babaji's Kriya Yoga
Babaji's Kriya Yoga Images
English Deutsch Français Français
Español Italiano Português Português
Japanese Russian Bulgarian Dansk
Arabic Farsi Hindi Tamil
Turkish Chinese Polish Estonian
 

              

இலங்கை ஆசிரமம் மற்றும் வெளியீடுகள்

கொழும்பு, இலங்கை ஆசிரமம்

பாபாஜியின் கிரியா யோக ஆச்சாரிய வரிசை அறக்கடளை இலங்கையில் பதிவு செய்யப்பெற்ற ஓர் சங்கமாகும். இந்த அறக்கட்டளையின் சார்பில் ஒரு ஆசிரமம், ஒரு பெரிய கூட்ட மன்றம் மற்றும் கடற்கரையையொட்டி சத்குரு பாபாஜியின் ஆலயம் ஒன்றும் இலங்கையில் கொழும்பிற்கு தெற்கே பராமரிக்கப் பட்டு வருகின்றது. இங்கு பொது மக்களுக்கு அறிமுக வகுப்புகள், வராந்தம் கிரியா பஞ்சாங்க யோக வகுப்புகள், தியான மண்டபம், புத்தக சாலை, மற்றும; பாபாஜியின் கிரியா யோக தீட்சை கருத்தரங்குகள் வழங்கப்படுகின்றது. கிரியா யோக தீட்சை பெற்றவர்களுக்கு இங்கு சத்சங்கங்களும் நடை பெறுகின்றன.

ஆசிரம முகவரி
59 பீட்டர்ஸ் லேன்
தெஹிவளை
இலங்கை

மின்னஞ்சல்: இலங்கை ஆசிரமம்
தொலைபேசி:
Kriyanandamayi:: (00) (94) 773 706 988
Ahil: (00) (94) 776 055 359

பார்வை நேரம்: திங்கள் முதல் சனி வரை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
தனிப்பட்ட வகுப்புகள் தனி நபரோடு கலந்தாலோசித்த பிறகு நடத்தப் படும்.

ஆசிரமத்தில் இரவு நேரத்தில் தங்குவதற்கு அனுமதி இல்லை என்பதை மனதில் கொள்க.

1. கிரியா பாபாஜி மற்றும் பண்டைய கதிர்காமக் கோவில்.   இக்கட்டுரையைப் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
2. கிரியா பாபாஜி நாகராஜ்.   இக்கட்டுரையைப் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
3. இலங்கையில் பாபாஜியின் கிரியா யோக வரலாறு: ஒரு யாத்திரியின் கையேடு – M.G. சச்சிதானந்தா: இக்கட்டுரையைப் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

ஞாயிறு காலை 8 மணிக்கு வாராந்திர யோக வகுப்புகள் நடைபெறும். வியாழக் கிழமைகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு நாள் யோகப் பயிற்சி நடைபெறும்.

கொழும்பில் பாபாஜியிம் கிரியா யோக வகுப்புகளை ஏனைய இடங்களில் நடத்துபவர்கள்:

Krishnaveni
கிருஷ்ணவேணி, கிரியா ஹத யோக ஆசிரியர், கொழும்பு.

கிருஷ்ணவேணி குழந்தைவேல்

சாதனா யோக சிருஷ்டி
நம்பர் 90, ஆல்விஸ் ப்லேஸ்
கொட்டாஞ்சேனை, கொழும்பு 13, இலங்கை

மின்னஞ்சல்: கிருஷ்ணவேணி (அ) கிருஷ்யோகா

மொபைல் எண்: (00) (94)-(0)7.73.70.69.88

வகுப்புகள்:
திங்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை. இடம்: சாதனா யோக சிருஷ்டி, #90, அல்விஸ் ப்லேஸ், கொட்டாஞ்சேனை, கொழும்பு – 13.
செவ்வாய் மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை. இடம்: சாதனா யோக சிருஷ்டி, #90, அல்விஸ் ப்லேஸ், கொட்டாஞ்சேனை, கொழும்பு – 13.
புதன் மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை. இடம்: சாதனா யோக சிருஷ்டி, #90, அல்விஸ் ப்லேஸ், கொட்டாஞ்சேனை, கொழும்பு – 13.
புதன் மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை. இடம்: ஐங்கரன் யோக சிருஷ்டி, ஐங்கரன் ஹால், கொட்டாஞ்சேனை, கொழும்பு – 13.
வியாழன் மாலை 5 மணி முதல் 6 மணி வரை. இடம்: சாதனா யோக சிருஷ்டி, #90, அல்விஸ் ப்லேஸ், கொட்டாஞ்சேனை, கொழும்பு – 13.
வெள்ளி காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை. இடம்: சாதனா யோக சிருஷ்டி, #90, அல்விஸ் ப்லேஸ், கொட்டாஞ்சேனை, கொழும்பு – 13.
சனி காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை. இடம்: சாதனா யோக சிருஷ்டி, #90, அல்விஸ் ப்லேஸ், கொட்டாஞ்சேனை, கொழும்பு – 13.
ஞாயிறு காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை. இடம்: ஐங்கரன் யோக சிருஷ்டி, ஐங்கரன் ஹால், கொட்டாஞ்சேனை, கொழும்பு – 13.
ஞாயிறு காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: பாபாஜி ஆலயம், #90, பீட்டர்ஸ் லேன், தெஹிவளை.

 

ஆச்சார்யா சத்யானந்தா அவர்களுடன் முதல் நிலை தீட்சை கருத்தரங்கம்

இலங்கை நிகழ்ச்சிப் பக்கத்திற்குச் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.

தீட்சை பெற்றவர்கள் அனைவரையும் மறுஆய்வு செய்துகொள்ள வரவேற்கின்றோம்.

திசை:
பாபாஜியின் கிரியா யோக ஆசிரமம் தெஹிவளை கடற்கரையில், 59 பீட்டர்ஸ் லேனில், காலி வீதியருகே, கொழும்பின் தென் எல்லையில் இருந்து 0.5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

 

நமது தீட்சை கருத்தரங்குகள் ஆங்கிலத்தில் நடைபெறும்.

கருத்தரங்குகள் நடைபெறும் இடம் மற்றும் தேதி பற்றி தெரிந்துகொள்ள இங்கு 'கிளிக்' செய்யவும்.

 

 

 

அக்டோபர் 22-23, 2011-இல் தெஹிவளையில் அமைந்துள்ள பாபாஜியின் கிரியா யோக ஆச்சாரிய வரிசை ஆசிரமத்தில் நடைபெற்ற தீட்சை கருத்தரங்கினில் அறுபது பேர் பங்கேற்றனர்.

First level initiation seminar with Acharya Satyananda


ஆச்சாரியர் சத்யானந்தா அவர்கள் திரு பனடூர ஆரியஞானோ அவர்களுக்கு அக்டோபர் 22-23, 2011 தீட்சையின் போது பிரசாதம் அளிக்கிறார்

Acharya Satyananda present Prasad


அக்டோபர் 22-23, 2011 தீட்சை கருத்தரங்கத்தில் 40 சிங்களவர்களும்; 19 தமிழர்களும் கலந்து கொண்டனர்.

1st level seminar - October 2011


 

நமது வெளியீடுகளில் இரண்டினை சிங்களத்தில் மொழி பெயர்த்த பேராசிரியர் W.M.குணதிலகா (X குறியினால் குறிக்கப்பட்டிருக்கிறார்) சத்யானந்தா அவர்களிடம; பிரசாதம் பெற்றுக்கொள்கிறார். அக்டோபர் 23, 2011.Acharya Satyananda present Prasad to Professor W.M. Gunatilaka


பிராணாயாமம் பயிற்சி செய்யும் மாணவர்கள்

1st level seminar - October 2011


 


தெஹிவளை பாபாஜி ஆலயத்தில், உலகம் முழுவதுமுள்ள கிரியா யோக சாதகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக, வியாழன் தோறும் சிவலிங்க அபிஷேகம் நடத்தப்படுகின்றது. இருளையகற்றி அமைதியும் பேரானந்த வாழ்வும் உலகத்தார் அனைவருக்கும் வழங்கிட ஈசனைப் பிரார்த்தித்து பூஜையை ஈசனுக்கு அற்பணிக்கின்றோம். இப்படங்களில் இராதாதேவி அவர்கள் பூஜை செய்வதைக் காணலாம். அருகில் ஆசிரமச் செயலாளர் திரு. முருகேசு கந்தசாமி அவர்கள; வலப்புறமும், துணைச் செயலாளர் கிருஷ்ணவேணி இடப்புறமும் இருக்கின்றனர்.

Katirgama Shrine

 

Katirgama Babaji Temple

 

Katirgama Entrance

 

 

 

Shrine Katirigama

 

 

 

 

 

 

 

 

 

 

 


Shrine Katirigama refurbish

 

 

கதிர்காம ஆசிரமம் மற்றும் பாபாஜி கோவில்

கதிர்காமக் கோவில் படக்குவியலைக் காண்க

 

இலங்கையில் இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் இரு சமயத்தவருக்கும் மிகப்புனிதத் தலமாக விளங்கும் கதிர்காம முருகன் கோவில், இலங்கையின் தென் பகுதியான அம்பாந்தோட்டையிலிருந்து 40 கி.மீ. வடக்கே, அடர்ந்த கானகத்தினுள்ளே, மாணிக்க கங்கை நதியின் கரையில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனின் அருள் வேண்டி, சக்திவாய்ந்த, இயற்கை எழில்மிகு இத்தலத்திற்கு வருகின்றனர். பாபாஜி நாகராஜ், தனது குருவைத்தேடி இங்கு வந்து சித்தர் போகநாதரைச் சந்தித்தார். அவரது வழிகாட்டுதலில், நான்கு வருடகாலம் தியானமும் ஞானமும் கற்று, நிர்விகல்ப சமாதி அடைந்து முருகனின் அருள் பெற்றார் பாபாஜி. மேலும், தான் முருகனின் ஒரு அவதாரம் என்றும் உணர்ந்தார்.

பாபாஜி, சித்தர் போகநாதருடன், ஓர் ஆலமரத்தினடியில் அமர்ந்து ஞானம் பெற்ற இடத்தில் ஒரு சிறிய ஆலயம் எழுப்பப் பட்டுள்ளது. இத்தலம் தெய்வானைஅம்மன; கோவில் நுழைவிற்கு வெகு அருகில் அமைந்துள்ளது. தினமும் பூசாரிகளால் பூஜை நடத்தப் படுகின்றது. பாபாஜி, சித்தர் போகநாதர் மற்றும் முருகவேல் மூர்த்திகள் அமைந்துள்ள இவ்விடத்தில் பக்தர்கள் தியானம் மற்றும் யோகப் பயிற்சி மேற்கொள்ள ஊக்குவிக்கப் படுகிறார்கள்.

கோவிலிலிருந்து 10 நிமிடத் தொலைவில் அமைந்துள்ள பாபாஜி ஆசிரமத்திற்கு பக்தர்கள் வரவேற்கப்படுகிறார்கள். ஆசிரமம், மாணிக்க கங்கை நதியின் கிழக்கே, சி.டி.பி. போக்குவரத்து டிப்போவிற்குப்;பின்புறம் அமைந்துள்ளது. தியானம் செய்ய மிகச் சிறந்த இடமாகும். முன்கூட்டி தொடர்பு கொள்ள:

தொ.பேசி: 01.12.73.71.29

மின்னஞ்சல்: இலங்கை ஆசிரமம்

 




 

புத்தக நிலையம் செல்க

பாபாஜியின் கிரியா யோகம் – முதல்ப் பக்கம்

 

 

© 1995 - 2023 - Babaji's Kriya Yoga and Publications - All Rights Reserved.  "Babaji's Kriya Yoga" is a registered service mark.